ஆலய சிறப்புகள்


சுகப்பிரம்மரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூசிக்கப்பட்ட சிவ லிங்கம்.


சுகப்பிரம்மரிஷிக்கு முக்தி அளித்ததால் சிறந்த முக்தி தலமாக விளங்குகிறது.

ஆலயத்தில் பழமையான நீண்ட சுரங்கபாதை ஒன்று உள்ளது . இதனுள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த     சுரங்கப்பாதை இவ்வாலயத்தின் பழமைக்கு சிறந்த சான்று.


இந்த சிவலிங்கத்தை வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே தரிசிக்கமுடியும் மற்ற ஆறு மாதங்கள் நீர்  சூழ்ந்து ஆவுடையார் மட்டுமே காட்சியளிப்பார்.

பட்டினத்தாரால் பாடப்பட்ட புண்ணியஸ்தலம்.

"இறைத்தார் புரமெய்த வில்லிமை
நல்லிம வான்மகட்கு
   மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம்
செங்குன்றம் மன்னர்குன்றம் 
நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக்குன்றம்
என் தீவினைகள்
குறைத்தார் முதுகுன்ற மேகம்பர்
                                              குன்றென்று  கூறுமினே!"


ராமபிரான் இலங்கை செல்லும் முன் வழிபட்டது ராமேஸ்வரம் திருத்தலம். இலங்கையிலிருந்து திரும்பும்பொழுது வழிபட்டது "நெடுங்குன்றம்" திருத்தலம்.


இவ்வாலயத்தின் தல விருட்சம் சிவனுக்கு உகந்த வில்வ மரமாகும்.


கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு இங்கு சிவனே மலையாக அமர்ந்துள்ளதால் அடிமுடி காட்டாத அண்ணாமலையாரின்
 அருட்தீபம் இங்குள்ள மலையின் மீது ஏற்றப்படும் சிறப்பு வாய்ந்த
           திருத்தலம்.

பழமை வாய்ந்த கல்வெட்டுகளை கோவிலின் கற்சுவர்களில் இன்றும் காணலாம்.